இலங்கையில் முதலாவது அமெரிக்க எரிபொருள் நிரப்பு நிலையம்!📸


அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் மற்றும் ட்ரைஸ்டார் நிறுவனங்களின் கூட்டிணைப்பில் இலங்கையில் அமெரிக்காவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று (26) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சென்ங் தலைமையில் இன்று அம்பத்தலை பிரதேசத்தில் இந்த முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் Shell என்ற வர்த்தக நாமத்துடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான சில்லறை வர்த்தக எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரத்துக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஆர்.எம் பார்க்ஸ் தனியார் நிறுவனமானது நாடளாவிய ரீதியில் உள்ள 150 எரிபொருள் சில்லறை வர்த்தக வலையமைப்புக்கு Shell என்ற வர்த்தகப் பெயரை சூட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சின் மூலம் 20 வருட காலத்திற்கு செயற்படுவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.