குடல் மிளகு வறுவல் செய்வது எப்படி !


தேவையானவை:


குடல் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

முழு மிளகு - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு – கால் டீஸ்பூன்

சிறிய பச்சை மிளகாய் - ஒன்றில் பாதி

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு - சிறிதளவு


செய்முறை:


குக்கரில் குடலோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். வெந்த குடலை தனியாக எடுத்துவைக்கவும். குடல் வேகவில்லை என்றால், மீண்டும் குக்கரில் தண்ணீர் ஊற்றி (தேவையெனில்) வேகவைக்க வேண்டும். குடல் வெந்தது போக மீதம் உள்ள தண்ணீரை நான்-வெஜ் உணவுகள் செய்யப் பயன்படுத்தலாம். வெறும் வாணலியில் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் முழு மிளகைச் சேர்த்து லேசாக வறுத்து தட்டிவைக்கவும். பொடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வறுத்தால் குடல் வறுவல் மணம் நன்றாக இருக்கும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லேசாக தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், மீதமிருக்கும் கால் டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த குடல் மட்டும் சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு, தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். குடல் மிளகு வறுவலில் எண்ணெய்க்கேற்ப சுவை கூடும். கொழுப்பு நிறைந்த குடலாக இருந்தால், எண்ணெய் குறைவாகச் சேர்த்தால் போதும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.