நீர்த்துளி நமக்கு உயிர்த்துளி!
நீரின்றி அமையாது உலகு..!
🌎 நீரின்றி அமையாது உலகு.
சிக்கனமாய் கையாளப் பழகு.
🌏 தண்ணீர் எமக்கு அருமருந்து.
தவறாமல் தினம் இதை அருந்து.
🌍 ஆலைக்கும் வேண்டும் தண்ணீர்.
பூஞ்சோலைக்கும் வேண்டும் தண்ணீர்.
🌍 பறவைக்கும் வேண்டும் தண்ணீர்.
தரவைக்கும் வேண்டும் தண்ணீர்.
🌏 விலங்குக்கும் வேண்டும் தண்ணீர்.
வீட்டுத் தேவைக்கும் வேண்டும் தண்ணீர்.
🌍 மண் குளிர்ச்சிக்கும் வேண்டும் தண்ணீர்.
மின் சுழற்சிக்கும் வேண்டும் தண்ணீர்.
🌏 தாகத்துக்கும் வேண்டும் தண்ணீர்.
தாவரத்துக்கும் வேண்டும் தண்ணீர்.
🌏 காட்டுக்கும் வேண்டும் தண்ணீர்.
காற்றலைக்கும் வேண்டும் தண்ணீர்.
🌍 பிறப்பில் தெளிக்கவும் தண்ணீர்.
இறப்பில் குளிக்கவும் தண்ணீர்.
🌏 நீர்த்துளி நமக்கு உயிர்த்துளி!
நீரின்றி போனால் உயிர்ப்பலி✍️
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை