யாழ் எம்.பிக்களுக்கு நிதி பெற்றுத் தரப்பட்டது - கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பெற்றுத் தரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டிற்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 56 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான திட்ட வரைபுகள் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பன்முகப்படுத்தப்பட்ட நிதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், "கடந்த வருடமும் அப்போதைய அரசாங்கத்தினால் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் பிரஸ்தாபித்து மேலதிக நிதி கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதனடிப்படையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களூக்கும் அண்ணளவாக 50 மில்லியன் நிதி ஒதுக்கித் தரப்பட்டது" என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை