கொழும்பில் எம்.ஜீ.ஆர்!📸

 கட்டுகஸ்தோட்டவில் பிறந்த மாணிக்கம் அவர்கள் தன்னை மக்கள் திலகம் எம்.ஜீ.ராமச்சந்திரன் அவர்களாகவே உருவகித்து வாழ்ந்துவருகிறார்.


சிறுவயதில் இருந்தே தான் எம்.ஜீ.ஆர் மீது அதீத பிரியம் கொண்டிருந்ததாகவும், தான் பார்த்த அவரின் முதல் திரைப்படமான ‘இராமன் தேடிய சீதை’ படத்திலிருந்தே அவரை போல வாழ வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகவும் அதை தன்னால் முடிந்தளவுக்கு சுதந்திரமாக செயற்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்.


கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் நாட்டாமியாக தொழில் புரியும் அவர், தன் உழைப்பை தன் அலங்காரக்களுக்காகவே செலவளிப்பதாகவும், தான் இறந்தபின்னர் இவ்வாறான அலங்காரங்களுடனேயே அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே தமது இலட்சியம் எனவும் குறிப்பிடுகிறார்.


இவரின் இச்செயல் அப்பகுதிக்கு வருபவர்களை வெகுவாக கவர்கின்றதோடு ‘த ஹிந்து’ உட்பட பல ஊடகங்களும் இவரை விவரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


#MGR #MGRofPettah #funnyfacts #amazingfacts #vaanamlk #srilanka #colombo #lka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.