கனேடிய போர்க்கப்பல்தாய்வான் நீரிணை வழியாக பயணம்!
தாய்வான் நீரிணை வழியாக கனேடிய போர்க்கப்பல் இவ்வருடம் முதல் தடவையாகப் பயணித்துள்ளது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இரண்டு கப்பல்கள் பயணித்ததைத் தொடர்ந்து கனடாவின் இக்கப்பல் பயணித்தாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சு, அச்சமயம் சீனாவின் 24 யுத்த விமானங்களை தாய்வானுக்கு அருகில் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கனடாவின் ரோயல் கனேடிய கடற்படையின் ஹாலிஃபக்ஸ் எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா போர்க்கப்பலே இவ்வாறு பயணித்துள்ளது. இதன் ஊடாக தாய்வான் நீரிணையின் சுதந்திரம், அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த கனடா மீண்டும் உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தாய்வான் நீரிணை சர்வதேச நீரிணை என்ற கனடாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அதேநேரம், அமெரிக்காவின் போர்க்கப்பலொன்றும் கடல் ஆய்வுக் கப்பலொன்றும் ஏற்கனவே இந்நீரிணை வழியாக பயணித்தன.
தாய்வான் நீரிணையின் சர்வதேச அந்தஸ்தை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளதும் கப்பல்கள் இந்நீரிணை வழியாகப் பயணிப்பது தெரிந்ததே.
(ரொய்ட்டர்)
கருத்துகள் இல்லை