சில்லி சிக்கன்!


தேவையான பொருட்கள் :


பொருள்அளவு

சிக்கன் அரை கிலோ

கான்ப்ளார் மாவு 50 கிராம்

இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்

முட்டை 2

தயிர் 1 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய்தேவைக்கேற்ப

எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :


  முதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


  பின்பு கான்ப்ளார் மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.


  அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.


  பிறகு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வெந்தவுடன் எடுக்கவும். 


  அதனுடன் வெங்காயம், மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான சில்லி சிக்கன் ரெடி!


 

#tamilarul #tamilnews #tamilshorts #news #wuppertal #srinavathurgadevi #தமிழ்நாடுரெசிப்பீஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.