இயந்திர வாழ்வாகும் வெளிநாடு.....✈️
⭐உறைபனி தரையை மூடும்
உடைபல உடலை மூடும்
⭐நடை பின்னித் தள்ளாடும்
நகம் வெடிப்புக் குள்ளாகும்
⭐கை விறைத்துக் கல்லாகும்
காதால் குளிர் உள்ளேறும்
⭐முகம் வெளுத்து வழுப்பாகும்
முடி கொட்டி வழுக்காகும்.
⭐விடியுது என்றால் விசராகும்
வேலைக்கு போனால் உசாராகும்
⭐உழைப்பதெல்லாம் செலவாகும்
ஊருக்கு அது உலாவாகும்
⭐கிடைப்பதே உணவாகும்
குடும்ப உயர்வு கனவாகும்
⭐ஊர் நினைப்பு வந்தாடும்
உள்ளுக்குள் அது பந்தாடும்
⭐சுதந்திரம் தொலைவாகும்
இயந்திர வாழ்வாகும்.✍️
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை