ஓலை குடிசையில் வசித்து வந்த குடும்பத்திற்கு வீடு அமைத்து வழங்கப்பட்டது!
யாழ் இளவாலை உள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தினூடாக உயரப்புலம் பகுதியில் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அன்றாட கூலித்தொழில் புரியும் குடும்பம் ஒன்றின் மிகவும் பலவீனமான பொருளாதார சூழலைகருத்தில் கொண்டு சுமார் 550,000 ரூபா செலவில் வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது!
அமரர் செ.உலகநாதன் அவர்களின் ஞாபாகார்தமாக அவரின் மகன் உதயகுமாரன் அவர்கள் எமது சங்கத்திற்கு வழங்கிய 300,000/= நிதியிலிருந்தும் மேலும், குறித்த பயனாளியின் பங்களிப்பாக ரூபா 200,000/= உள்ளடக்கபட்டும் மேலும் ரூபா 50,000/= எமது சங்கத்தின் சேமிப்பில் இருந்தும் நிதி பெறபட்டும், குறித்த வீடு அமைக்கபட்டது!
கட்டுமான கூலி செலவுகளை கட்டுபடுத்தும் வகையில் குறித்த பயனாளியே வேலைகளை மேற்கொண்டார்!
அந்த வகையில் எமது சங்கத்தினூடாக பல்வேறு நலபணிகளில் ஆண்டுதோறும் ஈடுபட்டுவரும் திரு.உதயகுமாரன் அவர்களுக்கும், எங்களுடன் அவரை நெறிபடுத்தி உதவும் சகோதரன் திரு.சந்திரகுமாரன் அவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்!
குறித்த பயனாளி இது தனது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதுக்கும் மறக்கமுடியாத உயர்பணி என வாழ்த்தி நின்றார்!
கருத்துகள் இல்லை