குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள சேவை 24 மணி நேரமும்.!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்குவதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்தல்
தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்தல்
இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை