மேலும் 3 சந்தேகநபர்கள் கைது!
'கனேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (23) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மூவரும் கம்பஹா, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இக்கொலையுடன் தொடர்புடைய 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை