அதிரும் தென்னிலங்கை!!

 


புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செப்டம்பர் 13, 2023 அன்று,   

வந்தடைந்தபோது, ​​கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று (19) காலை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு  பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டடு தீர்ப்பு வழங்க சில நிமிடங்கள் உள்ள போது துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பிரதிவாதியின் கூண்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணி வேடமணிந்து வந்த ஒருவர் துப்பாக்கியைப் புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் உள்ளே வந்த பின்னர் , சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கொலையாளியான குறித்த நபர் மீது 19 வழக்குகள் நிலைவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

மாத்தறை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர் "கஜ்ஜா" என்கிற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது ஒன்பது வயது மகனும் மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர். கப்பம் கோருதல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்வும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தென்னிலங்கை துப்பாக்கிச் சூடுகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளமையும் நாடு இவ்வாறு கொலைக்களமாக மாறுகின்ற போது நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பது தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.