சுவிஸ் வாழ் புலம்பெயர் மாணவி ஹர்ஷாவின் மிருதங்க ஆற்றுகை!!
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் ஆண்டு தோறும் (IITA)நடாத்தப்படும் தண்ணுமை (மிருதங்க)ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 15-02-2025 சனிக்கிழமை
Gemeindesaal, Schulrain 12, Ottenbach
என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஐரோப்பாவில் முதல் பெண்ணாக மிருதங்க ஆற்றுகை செய்துள்ள செல்வி ஹர்ஷா அவர்கள் பாலகுமரன் மதி தம்பதிகளின் மூத்த புதல்வி ஆவார்.
இவர் சிறுவயது தொடக்கம் தேசியப்பாடல்கள்,சைவப்பாடல்களென பலவற்றைப் பாடியதோடு மட்டுமல்லாது போட்டிகளில் வெற்றிபெற்று பல விருதுகளையும் தன்வசப்படுத்திய ஒருவராவார்.
கல்வியிலும் கலைத்துறையிலும் சிறந்து விளங்கும் மாணவி ஹர்ஷாவுக்கு
உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் வாழ்த்துகளையும் மகிழ்வையும் இணையத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவரின் இந்த சிறப்பான ஆற்றுகைக்கு இவரது ஆசான் கலாவித்தகர்ஸ்ரீ.ருக்சன் அவர்களே காரணமாகும்.
மிருதங்க ஆற்றுகையில் ஏராளமான சுவிஸ்வாழ் உறவுகள் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை