விக்ரம் (1986) படமும் நானும்!!



நான் பிறந்த காலத்தில் எல்லாம் ஸ்கேனிங் செய்து ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க வசதியில்லை. அம்மாவுக்கு நான் பிறக்க முதல் எனது அண்ணாவும் அக்காவும் பிறந்ததால் குத்து மதிப்பாக நான் ஆண் குழந்தையாகத்தான் இருப்பேன் என்று நினைத்திருந்தாராம்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் வெளியாகும் படங்கள் அதே நாளில் இலங்கையில் வெளியாவதில்லை. அதனால் விக்ரம் படம் எங்களது ஊரில் 1988 ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது.

 3 ஆகஸ்ட் 1988 இரவு புதுமணத் தம்பதிகளான  எனது தாய்மாமா ரமேஷும் மாமியும் விக்ரம் படம் பார்த்துட்டு வந்திருக்கிறார்கள்.

அதில் கொடூரமான வில்லனாக சத்தியராஜ் மிரட்டியிருக்கிறார். அவர்கள் படம் பார்த்து முடிந்து வீடு வந்து தூங்கி எழுந்ததும்  அதிகாலை 5.30க்கு நான் பிறந்ததாக செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.

எனது அப்பா எனக்கு ஷாங்கன் என்று பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அம்மாவின் உறவினர்களுக்கு அந்தப் பெயர் செட் ஆகவில்லை.  

வீட்டுக்கு வந்து பார்த்த மாமியிடம் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் விக்ரம் படத்துல வந்த லேட்டஸ்ட் பெயர் ஒன்று சொல்லியிருக்கிறார்.

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். அந்தப் படத்தில்  சத்யராஜின் கொடூர வில்லன் கேரக்டரின் பெயர் "சுகிர்தராஜ்".

பெயர மட்டும் கொடூர வில்லன்டத வச்சிருக்காங்க, ஆனா நான் பொண்டாட்டிட்ட அடி வாங்கித் திரியுறன். 

இதெல்லாம் சத்யராஜ் பார்த்தா என்ன நினைப்பாரு..


சுகிர்தராஜ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.