Valentine Day is not lovers day! வேலன்டைன் - காதலர் தினமல்ல.

 


எத்தனை பேருக்குத் தெரியும்?


Valentine Day is not lovers day!                       வேலன்டைன் - காதலர் தினமல்ல. இன்று மரித்த ஒரு போதகர் தினம்.


வேலன்டைன் என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இந்தெர்மனா என்ற பட்டணத்தில் வாழ்ந்தார்.  இவர் வாழ்ந்த காலத்தில் கிளாடியஸ் கோதிகஸ் என்ற அரசர்  ரோமை ஆண்டு வந்தார்.  இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தான்.


இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார்.  உபத்திரவபடுத்தபடும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார்.


கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்களாம் என்று சட்டம் கொண்டு வந்தான்.


இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர்சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.


இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தான்.  சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன் உடன் சிறையில் இருந்த  46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார்.


இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது. அரசர் வேலன்டைன்னை கிறிஸ்துவை மறுதலிக்கவும், ரோம தேவதைகளை வணக்கவும் கட்டளையிட்டான்.


வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசருக்கு இயேசுவை அறிவித்தார். இதனால் கோபம் அடைந்த அரசன் வேலன்டைனை பிப்ரவரி 14 தேதி கொலை செய்தான். 


வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும், உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் இயேசுவுக்கு இரத்த சாட்சியாய் மரித்தார்.


பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்காக அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும். மற்றபடி இந்த நாளுக்கும் காதலர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.