பேர்லின் தமிழாலயயத்தின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின வருடாந்த கூட்ட அறிக்கை!📸
நேற்றுக்22.03.2025 காலை 10 மணிக்கு பேர்லின் தமிழாலயத்தின் வருடாந்த பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கூட்டம் நிர்வாகத்தின் தலைமையில்
நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழாலயத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கிய விடையங்களை விவாதித்தனர்.கூட்டத்தின் தொடக்கத்தில் நிர்வாகம் உற்சாகமான வரவேற்பை கூறியது. தமிழாலயத்தின் வளர்ச்சியில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். பின்னர், பாடத்திட்ட முன்னேற்றம், புதிய கற்பித்தல் முறைகள், பள்ளி திட்டங்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.தமிழாலயத்தின் பிரிவுசார் பொறுப்பாளர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தமிழாலயத்தின் வருடாந்த கணக்கறிக்கையும் முன்வைக்கப்பட்டு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக யேர்மனியின் தமிழ் கல்வி கழகத்தின் வடமாநில செயற்பாட்டாளர் கலந்து கொண்டார். தனது உரையில், யேர்மனியில் தமிழ் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு குறித்து விளக்கினார். மேலும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்யும் உழைப்பை பாராட்டி, அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி தெரிவித்தார். பள்ளியின் வளர்ச்சிக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.
இத்தகவல் பரிமாற்றத்துக்கு இணையாக, பெற்றோர்கள் பிரதிநிதிகளுக்கு நிர்வாகத்தினரால் மலர்க்கொத்து வழங்கி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இது அவர்களின் பல ஆண்டுகளாகிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.
அதோடு, மாணவர்களின் கருத்துகளும் கூட்டத்தில் இடம்பெற்றன. இது தமிழாலயத்தின் வளர்ச்சியில் மாணவர்களின் உரிய பங்குபற்றல் மிகவும் முக்கியமானது என்பதையும், தமிழாலயத்தின் எதிர்கால முன்னேற்றத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவது சிறந்த பாடமாக அமையும் என்பதையும் உறுதிப்படுத்தியது.
கூட்டத்தின் முடிவில், தமிழாலயத்தின் நிர்வாகம் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தனர். பொதுவாக, மிகவும் பயனுள்ளதாகவும், முன்னேற்றம் நோக்கியதாகவும் அமைந்த இந்த கூட்டம், தமிழாலயத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் முக்கியமாகக் கருதப்பட்டது.
Jahresbericht der Eltern-Lehrer-Versammlung des Thamilalayam Berlin
Gestern um 10 Uhr fand die jährliche Eltern-Lehrer-Versammlung des Thamilalayam Berlin unter der Leitung der Schulleitung statt. An der Versammlung nahmen Eltern, Lehrer sowie Vertreter der Schule teil, um wichtige Themen zur Bildung und Entwicklung der Schüler zu besprechen.
Die Schulleitung begrüßte die Anwesenden herzlich und betonte die Bedeutung der engen Zusammenarbeit zwischen Eltern und Lehrern für die Entwicklung und den schulischen Erfolg der Kinder. Anschließend wurden verschiedene Themen wie der Fortschritt des Lehrplans, neue Unterrichtsmethoden, Schulprojekte und die zusätzliche Unterstützung für die Schüler ausführlich diskutiert. Auch die Bereichsverantwortlichen des Thamilalayam teilten ihre Ansichten mit.
Ein weiterer wichtiger Punkt der Sitzung war die jährliche Finanz- und Tätigkeitsbericht des Thamilalayam, der vorgestellt und erläutert wurde.
Ein besonderer Höhepunkt der Versammlung war die Teilnahme der Gebietsleiterin der Tamilischen Bildungsvereinigung Deutschlands für die nördlichen Bundesländer. In ihrer Rede erläuterte sie die aktuellen und zukünftigen Bildungspläne für Tamilisch in Deutschland. Sie würdigte das Engagement der Eltern und Lehrkräfte und bedankte sich für ihren selbstlosen Einsatz. Zudem ermutigte sie alle Anwesenden, sich weiterhin aktiv für die Weiterentwicklung der Schule einzusetzen.
Als Anerkennung für ihr langjähriges Engagement und ihren wertvollen Beitrag zur Entwicklung der Schule überreichte die Schulleitung den Elternvertretern einen Blumenstrauß als Zeichen der Wertschätzung.
Besonders erfreulich war, dass in dieser Versammlung auch die Meinungen der Schüler berücksichtigt wurden. Dies unterstreicht die Bedeutung der aktiven Mitwirkung der Schüler an der Entwicklung des Thamilalayam. Die enge Zusammenarbeit zwischen Schülern, Eltern und Lehrern wurde als wesentlicher Bestandteil für den zukünftigen Fortschritt der Schule hervorgehoben.
Zum Abschluss bedankte sich die Schulleitung bei allen Teilnehmern für ihre Unterstützung und ihr Engagement. Insgesamt war die Versammlung sehr produktiv und richtungsweisend, um die schulische Zusammenarbeit weiter zu verbessern und die Zukunft der Schüler am Thamilalayam Berlin erfolgreich zu gestalten.
கருத்துகள் இல்லை