சாவகச்சேரியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!📸
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநரும், சிறப்பு விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ரம்யா சி.எஸ் ஆகியோருடன் மன்னார் மாவட்ட அரச அதிபர் மற்றும் அரச திணைக்கள, அரசசார்பற்ற நிறுவன உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஐ.எல்.ஓ தொண்டு நிறுவனத்தினரால் பால் நிலைக்கொள்கை தொடர்பான ஆவணம் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
இன்றும் நாளையும் நடைபெறும் இன் நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகள் பெரிதும் இடம்பிடித்திருந்ததுடன் வைத்தியசாலைகளினால் விசேட மருத்துவமுகாமும் ஒழுங்கு சொய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை