இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு !
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”எமது அண்டைய நாட்டுக்காக எமக்கு ஒரு பொறுப்பு உள்ளதைப் போன்று எமது அண்டைய நாட்டுக்கும் அவ்வாறான பொறுப்பு உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தை விடவும் அதிக உதவி தங்களது தரப்பினரால் வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை