நீ தவறுகளைச் செய்யாதே!


சோகங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்

      நீ பாவங்களைச் செய்யாதே! 


காயங்கள் உன்னைக் கட்டிப்போட்டாலும்

     நீ  காலங்களைத் திட்டாதே! 


வாழ்க்கை உன்னைத் தட்டிவிட்டாலும்

    நீ வார்த்தைகளைக் கொட்டாதே! 


வறுமை உன்னை வாட்டியெடுத்தாலும்

     நீ வல்லமையை இழக்காதே! 


தனிமை உன்னைத் தவிக்கவிட்டாலும்

      நீ தவறுகளைச் செய்யாதே! 


மழையோ புயலோ புரட்டிப்போட்டாலும்

     மனமே நீ கலங்காதே! 


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.