உலகின் பல பகுதிகளில், பகுதி சூரிய கிரகணம்!
சனிக்கிழமை காலை உலகின் பல பகுதிகளில், பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நகர்ந்து பூமியின் மீது சந்திரனின் நிழல் படும்போது ஏற்படுத்தும் தாக்கமே பகுதி சூரிய கிரகணம் என்று கூறப்படும். இதுவே ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும், மேலும் இது அமெரிக்கா, கனடா, கரீபியன், ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது.
முழு சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், முழு சூரியனும் மறைக்கப்படாது, பகுதி சூரிய கிரகணத்தின் போது சூரியன் வேறு வேறு அளவுகளில் தென்படும்.
வடகிழக்கு அமெரிக்கா, ஐரோப்பாவின் பல பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் வடமேற்கு கடற்கரை இன்று பல இடங்களில் அடுத்த புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை