உயிரிழந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில்,


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகயீனம் காரணமாக மரணமடைந்த மாணவிக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.


பெற்றோர் பட்டம் பெற்ற அந்தத் தருணம் உணர்ச்சி மிகுந்ததாக அவையில் இருந்தவர்கள் கண்ணீர் மல்க அமர்ந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.