சர்வதேச செஸ் போட்டி – பிரக்ஞானந்தா வெற்றி!


 Prague Masters சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது.


9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.


விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.