அனுரகுமார திசாநாயக்கா விரைவில் நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம்!
இலங்கை குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா விரைவில் நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் .
தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம் எல் சம்சுன் அலியின் அழைப்பின் பேரில் நிந்தவூர் பிரதேசத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா இங்கு கடந்த அரசாங்கங்களின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்த உள்ளார்
இது தொடர்பாக ஜனாதிபதி அனுரக்குமார திசாநாக்காவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தபோதே தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம் எல் சம்சுன் அலி இந்த விஜயத்திற்கான அழைப்பை விடுத்தார்
அத்துடன் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த காலங்களில் அதிகார வர்க்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த தோழர் சம்சுன் அலி இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச செயற்பாட்டாளர் ஏ இப்திகார் அஹமட் முதலானோரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை