சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தமிழர் ஒருவரின் அனுபவப் பகிர்வு.!
”அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி நிலத்தில் படுக்கப் போட்டார்கள். பின் ஏதோவொன்று என்னைத் தொடுவதை உணர்ந்தேன். அது ஒரு சூடான இரும்புக்கம்பி. அவர்கள் அக்கம்பியால் எனது முதுகு மற்றும் தோள்ப்பட்டையில் ஒரிரு செக்கன்கள் வைத்து அழுத்தினார்கள். பின்னர் அவ்விடத்திலிருந்து எடுத்து மீளவும் வைத்து அழுத்தினார்கள். இவ்வாறு எனது உடலில் பல இடங்களில் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தோள்ப்பட்டை மற்றும் முதுகிலிருந்த முடிகள் கருகிவரும் வாசனையை என்னால் உணரமுடிந்தது. என்னால் வலியைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் கத்திக் கொண்டிருந்தேன். அவர்கள் தொடர்ந்து சூடு வைத்துக் கொண்டிருந்தார்கள்” - சிறிலங்காப் படைகளின் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தமிழர் ஒருவரின் அனுபவப் பகிர்வு.
- ஆவண வெளியீட்டுப் பிரிவு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
22.07.2022
#தமிழினப்படுகொலை
#TamilGenocide
கருத்துகள் இல்லை