தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம்!
தேங்காய் விலை அதிகரிப்பு, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் தேவையான தென்னை கன்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை கன்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை