தமிழரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத் தாக்கல்!📸


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்று தாக்கல் செய்துள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்களின் பங்கேற்போடு, இரு சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நண்பகல் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 #shritharan #sritharan #ShritharanSivagnanam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.