துரோகத்தனமான வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள்!
நேற்றைய தினம் (27) நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு பிரதிநிதிகூட இல்லாமல் மக்கள் தமது விடயங்களை தாங்களாகவே முன்வைத்தனர் அதற்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவரே முடிவு எடுத்ததாகவும் சில முடிவுகள் மக்கள் நலன் சார்ந்தது அல்ல தாகவும் இருந்தது என மக்கள் தமது விசனத்தை தெரிவிக்கின்றனர்
தேர்தல் காலங்களில் போட்டி போட்டு தினம் தினம் வரும் பிரதிநிதிகள் தமது வாக்கு வங்கிகளை நிரப்பி விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகள் அபிவிருத்தி என வரும் போது கண்டும் காணாமலும் போவது ஏன் என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை