ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த போராட்டம்!
2025 மார்ச் 11ஆம் திகதி, பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) கிளர்ச்சியாளர்கள் குவெட்டா – பெஷாவர் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலைத் தடம் புரட்டி, நூற்றுக்கணக்கான பயணிகளைப் பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இந்த ரயிலில் பயணித்த 450 பயணிகளில், 100 க்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு பணியாளர்கள் எனத் தெரிகிறது. இந்த தாக்குதலில், ரயிலின் என்ஜின் சாரதி உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் விடுதலைப் படையால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டக்காரர்கள்? இவர்களின் போராட்டத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
பலூசிஸ்தான், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் மிகப்பெரியதும், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசமாகும்.
இந்திய பிரிவினையின் போது, பலூசிஸ்தான் என்ற சுதந்திர பூமியை முகமது அலி ஜின்னா பாகிஸ்தானுடன் இணைத்ததே இன்றைய பலூச் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பலூசிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்த போதும், பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இன்று வரை இருந்து வருகிறது. பலூச்சு மக்கள் தங்கள் நிலத்தின் வளங்களை பாகிஸ்தான் மத்திய அரசு சுரண்டுவதாக குற்றம் சாட்டுவதோடு. பாகிஸ்தான் தனது பூமியை ஆக்கிரமித்து தமது அடிப்படை உரிமைகளை நசுக்கி வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக, பலூச்சு மக்களின் விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடராக இருந்து வருகிறது.
பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) போன்ற போராட்டக் குழுக்கள், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்று பிரிந்து செல்ல பல தசாப்தங்களாக போராடி வருகின்றன. இவர்களின் போராட்டத்திற்கு பலூச்சு மக்கள் மீது பாகிஸ்தான் இழைக்கும் பொருளாதார மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளே அடிப்படைக் காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
பாகிஸ்தான் அரசு பலூச்சிஸ்தானில் சீனாவின் ஆதரவுடன் குவாதர் துறைமுகம் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவமிக்க திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் பிராந்திய அரசியல் பதற்றங்களை உருவாக்கியுள்ளதோடு, அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரங்களையும் வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது.. சீனாவுடன் இணைந்து நடத்தப்படும் இத்தகைய திட்டங்களால் பலூச்சு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசின் மீதான பலூச்சு மக்களின் கோபம் இரட்டிப்பாகி வருவதற்கு இதுவும் காரணமாகி இருக்கிறது..
பலூச்சிஸ்தானின் போராட்ட வரலாறு 1947ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிந்தபோதே தொடங்கியது. சுதந்திர நாடாக இரந்த பலூச்சிஸ்தானை முஹம்மது அலி ஜின்னா துரோகத்தனமாக பாகிஸ்தானுடன் இணைத்ததாக பலூச் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பலூச்சு மக்களுக்கு ஏற்பட்ட பலத்த ஏமாற்றம் விடுதலை போராட்டமாக வெடித்தது. தமது மண்ணின் மைந்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்த பலூச்சு தேசியவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை ஆரம்பித்தனர்.
1958, 1962, மற்றும் 1973 காலப்பகுதிகளில் பலூச்சிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. 1977ல், பாகிஸ்தான் இராணுவம் பலூச்சிஸ்தானில் பெரும் அடக்குமுறைகளை அரங்கேற்றியது. இதில் ஆயிரக்கணக்கான பலூச்சு மக்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டங்கள் பலூச்சு மக்களின் விடுதலை வேட்கையை மேலும் பலப்படுத்தின.
2006இல், பலூச்சு பழங்குடித் தலைவர் அக்பர் கான் புக்டி பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பலூச்சு மக்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. புக்டி பலூச்சிஸ்தானின் இயற்கை வளங்களில் நியாயமான பங்கு கோரியவர். அவரது கொலை பலூச்சு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று, பலூசிஸ்தான் தேசியவாத இயக்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் தலைமை பிளவுபட்டு, உத்திகளில் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. என்றாலும், பலூச்சு மக்களின் போராட்டம் தொடர்கிறது. அவர்கள் தங்கள் நிலத்தின் வளங்களில் நியாயமான பங்கும், சுயாட்சியும் கோருகின்றனர்.
பலூச்சிஸ்தானின் போராட்டம், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு நீண்டகால போராட்டமாகும். இந்த போராட்டம் எப்போது முடியும் என்பது தெரியவில்லை.
பலூச்சிஸ்தானின் போராட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணிகள் பின்வருமாறு:
பொருளாதார ஒடுக்குமுறை: பலூசிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், அந்த பகுதி மக்கள் அதன் பலனை அனுபவிக்கவில்லை. பாகிஸ்தான் மத்திய அரசு பலூச்சிஸ்தானின் வளங்களை சுரண்டி, அந்த பணத்தை பாகிஸ்தானின் பிற பகுதிகளில் முதலீடு செய்கிறது.
அரசியல் ஒடுக்குமுறை: பலூச்சு மக்களுக்கு பாகிஸ்தான் அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை.
பண்பாட்டு ஒடுக்குமுறை: பலூச்சு மக்களின் பண்பாடு மற்றும் மொழி பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்படுகிறது.
இந்த காரணிகள் பலூச்சு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, அவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற போராடி வருகின்றனர். பலூச்சிஸ்தானின் போராட்டம் தொடர்ந்து நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு போராட்டமாக கருதப்படுகிறது. இந்த போராட்டம் 1947ஆம் ஆண்டு இந்தியா இரண்டாக பிரிந்தபோதே வேர்விடத் தொடங்கின.
அப்போது பலூசிஸ்தான் கலாத், கரான், லாஸ் பெலா மற்றும் மகரன் என்ற நான்கு சமஸ்தானங்களைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானின் நிறுவனத் தந்தை முஹம்மது அலி ஜின்னாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் , பலூசிஸ்தான் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. இதனால் பலூச்சு மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர், பலூச்சு தேசியவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பலூசிஸ்தான் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:
1947-48: பலூச்சிஸ்தானின் இணைப்பு
பலூசிஸ்தான் முதலில் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானின் நிறுவனத் தந்தை முஹம்மது அலி ஜின்னா பலூச்சிஸ்தானை பலவந்தமாக பாகிஸ்தானுடன் இணைத்தார். இதனால் பலூச்சு மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. 1948ல், பிரின்ஸ் அப்துல் கரீம் தலைமையில் முதல் ஆயுதக் கிளர்ச்சி துவங்கியது. இது பலூச்சு தேசியவாதத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.
1958-59: இரண்டாவது பலூசிஸ்தான் மோதல்
பாகிஸ்தான் அரசு “ஒரு அலகு திட்டத்தை” (One Unit Scheme) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பலூச்சிஸ்தானின் சுயாட்சி குறைக்கப்பட்டது. இதனால் பலூச்சு தலைவர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. நவாப் நௌரோஸ் கான் தலைமையில் கிளர்ச்சி துவங்கியது. ஆனால், இந்த கிளர்ச்சி பாகிஸ்தான் அரசால் அடக்கப்பட்டது.
1962-63: மூன்றாவது பலூசிஸ்தான் மோதல்
பலூச்சு தேசியவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மீண்டும் கிளர்ச்சி துவங்கினர். இந்த கிளர்ச்சியின் முக்கிய கோரிக்கை பலூச்சிஸ்தானின் எரிவாயு வருவாயில் நியாயமான பங்கு பெறுவது மற்றும் சுயாட்சி அதிகாரங்களை மீண்டும் பெறுவது ஆகியவை ஆகும். இந்த கிளர்ச்சியும் பாகிஸ்தான் அரசால் அடக்கப்பட்டது.
1973-77: நான்காவது பலூசிஸ்தான் மோதல்
இந்த கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்தது. பலூச்சு பழங்குடித் தலைவர்கள் மாரி, மெங்கல் மற்றும் புக்டி ஆகியோர் தலைமையில் சுமார் 55,000 பலூச்சு பழங்குடியினர், 80,000 பாகிஸ்தான் இராணுவத்தினருடன் போராடினர். பாகிஸ்தான் விமானப்படை கிராமங்களை குண்டுவீசி, ஆயிரக்கணக்கான பலூச்சு பொதுமக்களைக் கொன்றது. இந்த மோதல் மிகவும் மோசமான நிலைக்கு உயர்ந்ததால், ஈரான் தனது பலூச்சு பகுதியில் பலூச்சு தேசியவாதம் பரவுவதை அஞ்சி, பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்கியது. 1977ல், பாகிஸ்தான் அரசு பழங்குடியினருக்கு மன்னிப்பு வழங்கிய பின்னர் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
2006: அக்பர் கான் புக்டியின் கொலை
பலூச்சு பழங்குடித் தலைவர் அக்பர் கான் புக்டி பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பலூச்சு மக்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. புக்டி பலூச்சிஸ்தானின் இயற்கை வளங்களில் நியாயமான பங்கு கோரியவர். அவரது கொலை பலூச்சு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2010கள் முதல் தற்போது வரை:
பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) போன்ற குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். குவாதர் துறைமுகம் மற்றும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் (China – Pakistan Economic Corridor) போன்ற திட்டங்கள் பலூச்சு மக்களின் கோபத்தை மேலும் தூண்டி இருக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் பலூச்சிஸ்தானின் வளங்களை பாகிஸ்தானும், சீனாவும் ஒன்றிணைந்து சுரண்டுவதாக பலூச்சு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலூசிஸ்தான் போராட்டத்தின் முக்கிய காரணிகள்:
பொருளாதார ஒடுக்குமுறை:
பலூசிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், அந்த பகுதி மக்கள் அதன் பலனை அனுபவிக்கவில்லை. பாகிஸ்தான் மத்திய அரசு பலூச்சிஸ்தானின் வளங்களை சுரண்டி, அந்த பணத்தை பாகிஸ்தானின் பிற பகுதிகளில் முதலீடு செய்கிறது.
அரசியல் ஒடுக்குமுறை:
பலூச்சு மக்களுக்கு பாகிஸ்தான் அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை.
பண்பாட்டு ஒடுக்குமுறை:
பலூச்சு மக்களின் பண்பாடு மற்றும் மொழி பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்படுகிறது.
இன ஒடுக்குமுறை:
பலூச்சு மக்கள் பாகிஸ்தானின் பிற இனங்களால் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அடக்குமுறைகளை நடத்துகிறது.
பலூசிஸ்தான் போராட்டத்தின் எதிர்காலம்:
பலூசிஸ்தான் போராட்டம் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், பலூச்சு மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதில் மிகவும் உறுதியாக இருப்பதை அவர்களின் செயற்பாடுகள் காட்டுகின்றன. பாகிஸ்தான் அரசு பலூச்சு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினால் மட்டுமே இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியும்.
சூரியா
கருத்துகள் இல்லை