வவுனியா தபால் நிலையத்திலும் ஈ.எம்.எஸ் சேவை !📸

 


இலங்கை தபால் திணைக்களத்தின் வெளிநாடுகளுக்கான பொதிகள் அனுப்புகின்ற சேவையை மேம்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.


இது மிகவும் திறமையான மற்றும் நம்பகமான முறையில் சர்வதேச பொதிகள் அனுப்புகின்ற சேவையை வழங்குவது குறித்து பொதுமக்களுக்குக் அறிவுறுத்தவதாகும் 


இந்த சேவையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி வவுனியா தபால் நிலையத்திலும் நடைபெற்றது.

வவுனியா தபால் நிலையத்திலிருந்து நகரத்திற்கு நடந்து சென்ற தபால் ஊழியர்கள், துண்டு பிரசுரங்களை விநியோகித்து, இந்த ஈ.எம்.எஸ் சேவை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.