யாழ்.பல்கலைக்கழக இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் கவனயீர்ப்பு!📸


இலவசக்கல்வியால் உருவான அரச பல்கலைக்கழகங் களில் பயிலும் சகல பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலை வாய்ப்புக் கொள்கையை உருவாக்கு, உள்ளகப் பயிற்சியை உடனடியாக வழங்கு! எனும் தொனிப்பொருளில் யாழ்.பல்கலைக்கழக இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.


யாழ்.பல்கலைக்கழக விஞ் ஞான பீடத்திலிருந்து ஆரம்ப மான குறித்த பேரணியின் போது நியாயமற்ற தேர்வு பரீட்சை முறையை உடனடியாக நிறுத்து, தாதிய பட்டதாரிகளை உடன டியாக அரச சேவைக்கு அமர்த்து, ஆட்சிமாறியது போல பட்டதாரிகளின் வாழ்க்கைமாறுமா?, மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்து, போன்றகோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத் தாங்கியவா றும் போராட்டத்தில் ஈடுபட் ட னர்.


குறித்த பேரணியானது யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட வேளை அங்கு வருகை தந்தை பொலிஸார் உள்ளூராட்சித் தேர்தல் காலமாக இக்காலப்பகுதி உள்ளமையால் தேர்தல் சட்டத்தின் பிரசாரப் பேரணிகள். ஊர்வலங்கள். நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பேரணியில் ஈடுபட்ட மாணவர் களை பொலிஸார் தடுத்தி நிறுத்தியிருந்தனர்.


இதனையடுத்து குறித்த பேர ணியை கைவிட்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் திரும்பிச் சென்றிருந்தமை குறிப் பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.