செவ்வந்தி பற்றி தகவல் வழங்குவோருக்கான சன்மானம்12 இலட்சம்!
கணேமுல்ல சஞ்ஜீவவை நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்ல உதவிய சந்தேகத்தில் தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 12 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு குறித்த சன்மானம் வழங்கப்படும் என்பதுடன், தகவல் வழங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:-
Director, Colombo Crime Division - 071 - 8591727
Founder, Colombo Criminal Division - 071 - 8591735
கருத்துகள் இல்லை