ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் தொடர்பில் 3 பேர் கைது!
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு படுகாயமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய, இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் குருணாகல் பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தி நேஷன் (‘The Nation’) பத்திரிகையின் பிரதி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை வைத்ய வீதி பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தி கொடூரமாக தாக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேகநபர்கள் பலர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள் இல்லை