பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு - 20 பேர் படுகாயம்!


பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.  

நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

நேற்றைய தினம் தொழுகையை முடித்துவிட்டு மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போது இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது . 

மாணவர்களுக்கு போதனை செய்யும் தலைவரொருவரும் இதன்போது கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.