தேசிய மக்கள் சக்தியின் 6 ம் வட்டார வேட்பாளர் அறிமுகம்!📸


2025 ம் ஆண்டு நடைபெற்ற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 ம் வட்டார வேட்பாளர் அறிமுகம் செய்யும் நிகழ்வு 6 ம் வட்டார ( மத்தி) வேட்பாளர் ஏ.ஜி.எம். முபிஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை (13) ஏ.ஜி.எம். முபிஸ் 6 ம் வட்டார ( மத்தி) வேட்பாளர் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது.


தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வை.எம். நவாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 6 ம் வட்டார வேட்பாளர் அறிமுகம் செய்ததோடு 6 ம் வட்டாரத்திற்கு பட்டியல் வேட்பாளராக எம்.ஐ.எம். நபீஸையும் அறிமுகம் செய்தார்.


இதன் போது, எதிர் வரும் நாட்களில் நாம் எவ்வாறு உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றி பெறுவது தொடர்பான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றது.


மேலும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வை.எம். நவாஸ் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் " வட்டார தேர்தல் என்பது தேசிய மக்கள் சக்தியின் முதுகெலும்பு, 12 கிலோமீட்டர் வீதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 ம் வட்டாரத்திலும் உள்ள சில வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் 6 ம் வட்டார பொறுப்பாளர் எம்.ஏ.ஹம்சாத், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.