தென்னகோனின் வீட்டில்795 சாராயம்214 வைன் வெளிநாட்டு போத்தல்களும் மீட்ப்பு!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களை நாங்கள் கண்டறிய முடியும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீடு நேற்று (18) பிற்பகல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை