யாழில் 85 கி.கி கேரள கஞ்சா மீட்பு!
வடமராட்சி – மருதங்கேணி பகுதியில் இன்று (23) பெருமளவான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மருதங்கேணி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 85 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 40 பார்சல்கள் இன்று அதிகாலை ஆழியவளை கடற்கரையில் கைப்பற்றப்பட்டன.
இதன் மதிப்பு அண்ணளவாக ரூ. 17 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை