அமெரிக்கா உக்ரேனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தம்!


உக்ரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, யுக்ரேன் இடையே போர் நடைபெற்று வருகிறது. 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், யுக்ரேனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். 

கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், யுக்ரேனுக்கான ஆயுத உதவிகளைக் குறைத்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப், செலன்ஸ்கி இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக யுக்ரேனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.