பிரதமர் மோடியின் ஆரோக்கிய இரகசியம்!

 


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது 74 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க விரதம் இருப்பதாகவும், வெந்நீர் மட்டுமே குடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.



இந்தப் பழக்கத்தை 50 முதல் 55 ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “விரதம் என்பது ஒரு சுய ஒழுக்கம். விரதம் இருப்பது நம் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன், நம் சிந்தனை மற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும், விரதத்தின்போது நம் புலன்களின் உணர்திறன் கூர்மை ஆகிறது” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.


மழைக்காலங்களில் உணவு சமிபாடு ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், இந்தியாவில் பலரும் அந்த காலகட்டத்தில் 24 மணி நேரத்தில் ஒருமுறை மட்டுமே உணவு உண்கிறார்கள். நானும் ஜூன் மாதத்தின் இடையில் ஆரம்பித்து நவம்பர் மாத இறுதிவரை இதையே பின்பற்றுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


நவராத்திரி காலங்களில் முற்றிலும் உணவைத் தவிர்த்து வெந்நீரை மட்டுமே குடிப்பதாகவும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிற சைத்ர நவராத்திரி காலங்களான 9 நாட்களும் ஒரு நாளைக்கு ஒருமுறை பப்பாளிப்பழத்தைத் தவிர வேறு எந்த உணவையும் உண்பதில்லை எனவும் மோடி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.