கிளிநொச்சியில் CSE mobile app பயன்பாடுகள் தொடர்பிலான அறிவுப்பகிர்வு!📸
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் அலுவலர்களுக்கான பங்குச்சந்தை தொடர்பான அறிமுகம், அதில் எவ்வாறு முதலீடு செய்தல்,சந்தையினை பின்பற்றுதல் மற்றும் CSE mobile app பயன்பாடுகள் தொடர்பிலான அறிவுப்பகிர்வு கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் திருமதி குமுதினி நிரஞ்சன் அவர்கள் அறிவுப்பகிர்வு செயற்திட்டத்தின் விளக்கவுரையினை ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து மாவட்டச்செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் R.T.Mohan அவர்கள் (Investment Advisor
Bartleet Religare Securities Pvt Ltd) வளவாளராக கலந்துகொண்டு பங்குச்சந்தை தொடர்பான அறிமுகம், அதில் எவ்வாறு முதலீடு செய்தல்,சந்தையினை பின்பற்றுதல் மற்றும் CSE mobile app பயன்பாடுகள் குறித்து விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் கணக்காளர்,மாவட்ட உள்ளக கணக்காய்வாளர்,மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை