கரை திரும்பும் போது படகிலிருந்து தவறி விழுந்து மரணம்!
மீன்பிடித்து விட்டு படகின் முனையில் நித்திரை செய்தவாறு கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர் ஒருர் பலமாக தாக்கிய கடல் அலையால் தவறி விழுந்து உயிரிழப்பு - #காத்தான்குடியில் சோகம் .
நேற்று இரவு பாலமுனை கடற்கரையில் இருந்து படகு மூலம் மீன்பிடிக்க சென்ற காத்தான்குடி நூறானியா வீதியை சேர்ந்த பஷீர் நானா என்பவர் கரை திரும்பும் போது படகிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
இரவு மீன்பிடித்துக் கொண்டு கரை வரும்போது பூனொச்சிமுனை பகுதியில் தூக்கம் ஏற்பட்டதால் படகின் விளிம்பில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3.30 மணியளவில் படகின் மீது கடல் அலை தாக்கியதால் படகிலிருந்து தூக்க கலக்கத்தில் தவறி விழுந்து இவ்வாறு மரணம் அடைந்துள்ளார்..
ஜனாஸா தற்போது நதியா பீச் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிசாரிடம் இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தகவல்
பர்ஹானா_பதுறுதீன்
கருத்துகள் இல்லை