ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது கொடூரத் தாக்குதல்!📸
வடகிழக்கு உக்ரேனில் உள்ள சுமி நகரத்தின் மையப் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட 117 பேர் காயமடைந்துள்ளனர். தேவையான அனைத்து மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த கொடூரத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை