அதிர்ஷ்ட மந்திரங்கள் காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்!
பீஜ (அட்சர) மந்திரம் நமது உடலில் உள்ள சக்கரங்களை இயக்கி சக்தி அளித்து சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது.
இதனை பிரயோகிக்கும் இடம் அனைத்திலும் மிகப்பெரிய அதிர்வாற்றலை உண்டாக்கி அவ்விடத்திலும் அங்குள்ளோரின் ஆன்ம, ஜீவ சக்தியை பெருக்கும்.
க்லீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், கௌம், க்ரீம், ஹௌம், ஔம், சௌம் என்று ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரங்கள் உண்டு.
அட்சரங்கள் முன்,பின் இடம் மாறும்போது ஒளியும்,நிறமும்,அதிர்வும் மாறும்.
இவைகளை சரியான முறையில் வரிசைபடுத்தி பிரயோகிக்க அதீத ஆற்றலை உணரலாம்.
நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும்.
ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரம் ஏழு சக்கரங்களுக்கும், இந்திரயோனி (உள்நாக்கு), பிரம்மநாளம்( தலைஉச்சி) பகுதிகளுக்கும் அதிர்வுகளை கொடுத்து சக்தி ஊட்டும்பொழுது பலன்களை பெரிதும் ஈர்க்கின்றது.
க்லீம்- மூலாதாரம்
ஸ்ரீம்- சுவாதிட்டானம்
ஹ்ரீம் – மணிப்பூரகம்
ஐம்- அநாகதம்
கௌம் – விசுத்தி
க்ரீம்- இந்திரயோனி
ஹௌம்- ஆக்ஞா
ஔம்- நெற்றி உச்சி
சௌம்- பிரம்ம நாளம்
அதாவது ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ
(அட்சர) மந்திரம்’ஹௌம்’ தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும்.
சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும்.
இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.
கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை ..
தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
*ராசி தெரியாத அன்பர்கள்*
க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் கௌம் க்ரீம்
ஹௌம் ஔம் சௌம்
ஓம் சிவாய நமஹ
சௌம் ஔம் ஹௌம்
க்ரீம் கௌம் ஐம்
ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
ஓம் சிவாய நமஹ்
இரண்டும் சேர்த்து ஒரு முறை.
இவ்வாறு குறைந்தபட்சம் 54 முறை மனதினுள் ஜெபிக்க வேண்டும்.
மேலும் இதனை எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் மென்மேலும் வந்து சேரும்.
இன்பமே சூழ்க எல்லா உயிர்களுக்கும்
கருத்துகள் இல்லை