முள்ளிவாய்க்கால் முடிவைப்போல் பேரழிழப்பு!

 


முதலும் முடிவும் 

முகமாலையை உடைச்சு

முழு யாழ்ப்பாணத்தையும்

பிடித்தது போல்

முகமெல்லாம் பூரித்தது

உன் முதல்வருகை. 


ஆனையிறவில் கொடியேற்றி

ஆரவாரப்பட்டதுபோல்

ஆழ்மனதில் உனையேற்றி

அழகாக்கியது

என் உலகை. 


முன்னரங்கில் நின்று

முழிப்போடு இருந்ததுபோல்

உன்கரங்களைப் பிடிக்க

உயிர்ப்போடு இருந்தது

என் நிலைமை. 


பரா லைற் அடிச்சு

பதியும் விமானம் போல்

வராமலும் அடிக்கடி

தராமலும் இருந்ததில்லை

புதிய பேரொளியை. 


மிதிவெடியில் மிதிபட்ட

ஒற்றைக் காலைப்போல்

ஒருநொடியில் சிதைத்தது

ஏதார்த்தமானதொன்று

பேதை மனதை. 


இருந்தும், 


இறுதியுத்தம் போல்

உறுதிமொழிகள் மௌனித்தாலும்,


முள்ளிவாய்க்கால் முடிவைப்போல்

பேரழிழப்பு நேர்ந்தாலும், 


மனம் நினைவுகூர்ந்தே நகர்கின்றது

மேன்மைப் #பேரன்பை...✍️


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.