சஜித்திடம் சரணடைந்தார் ஹக்கீம்!
ஹக்கீம் - ஐக்கிய மக்கள் சக்தி மோதலினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்தை மீளப்பெற ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிழக்குக்கு தேர்தல் பிரச்சார விஜயத்துக்கு சென்றிருந்த போது இனி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி செத்து விட்டதாகவும் ரவூப் ஹக்கீம் பேசியிருந்தார். இதன் எதிரொலியாகவே ஐக்கிய மக்கள் சக்தி இந்த முடிவை ஆலோசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை அறிந்த ரவூப் ஹக்கீம் கிழக்கு வெளியே நடைபெறும் பிரச்சாரங்களில் நான் அப்படி சொல்லவில்லை, இப்படிதான் சொன்னேன் என அவரது கருத்தை மெருகூட்டி பேசி ஐக்கிய மக்கள் சக்தியினரை திருப்திப்படுத்தி தமக்கான தேசியப்பட்டியலை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை