கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!📸
கல்முனை கல்வி வலய அதிபர்களுக்கான கூட்டம் (10.04.25) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 2025 ஆம் கல்வியாண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், கல்விசார் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அடைவு மட்டத்தில் அதிகரிப்பினைக் காட்டிய பாடசாலையின் அதிபர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்முனை கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். குறித்த கல்முனை கல்வி வலயம் கடந்தாண்டு வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-நூருல் ஹுதா உமர்-





.jpeg
)





கருத்துகள் இல்லை