கொழும்பில் கொல்லப்பட்ட தமிழ்ப் பெண் கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை!
கொழும்பில் கொல்லப்பட்ட தமிழ்ப் பெண் - பயணப்பொதியில் உடல் - பத்து வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிக்கு மரண தண்டனை
கொழும்பு: கொழும்பு மேல் நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கின் குற்றவாளிக்கு இன்று (24) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வழக்கின் பின்னணி:
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியொன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சடலம் செட்டியார் தெருவிலுள்ள விடுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட தர்மராஜா கார்த்திகா என்பவருடையது என அடையாளம் காணப்பட்டது. பட்ரிக் கிருஸ்ணராஜா என்பவர் கார்த்திகாவை கொலை செய்து, உடலை பயணப் பொதியில் மறைத்து பெஸ்டியன் மாவத்தையில் கைவிட்டுச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு:
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் வழங்கப்பட்ட தீர்ப்பில், பட்ரிக் கிருஸ்ணராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
எனினும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, குற்றவாளி பட்ரிக் கிருஸ்ணராஜா தான் நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை