500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!


 இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்தியாவில் இருந்து படகின் மூலம் கடத்தி வரப்பட்ட மஞ்சளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து பொலிஸார் கைப்பற்றினர். 


மஞ்சளுடன் மூன்று பேர் இருந்ததாகவும் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற வேளை இருவர் தப்பி சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 


அதேவேளை மீட்கப்பட்ட 500 கிலோ மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.