உதவிக்கரம் கொடுத்த தொப்புள் கொடி உறவு!!
சிங்கப்பூரில் வசித்துவரும் சக்திவேல் என்பவர் தனது மகள் மற்றும் துணைவியாரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிலவற்றிற்கு
உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டைச்சேர்ந்த இவர் போரால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டிவருபவர்.
நல்மனதோடு சிறப்பான சமூக சேவையை செய்துவரும் சக்திவேல் அவர்களையும் அவர் குடும்பத்து உறவுகளையும்
பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துவதோடு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை