மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!📸

 




நீதி வேண்டும் !கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் இதற்கு காரணமானவர்களை சட்டம் மூலமாக முறையாகத் தண்டிக்குமாறு வலியுறுத்தியும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இன்று (08) காலை கொட்டாஞ்சேனை இராஜேஸ்வரி தனியார் கல்வியகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதையடுத்து ஊர்வலமாக இன்று கொழும்பு 04, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி வரை சென்ற மக்கள் அந்தப் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினரின் அசமந்த, பொறுப்பற்ற போக்கு குறித்தும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.