தமிழ் தலைவர்களுக்கு பகிரங்க மடல்.!


மதிப்பார்த கட்சித்தலைவர்களே பிரமுகர்களே !


கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் தேசத்தை கைவிடவில்லை என்ற செய்தியை தங்களுக்கும் உலகுக்கும் தம் ஜனநாயக ஆயுதம் கொண்டு வலியுறுத்தியிருக்கிறார்கள் அதன் படி பெரும்பான்மை பலத்தை தாங்கள் கட்சிகள் இணைந்து பெறும் வகையில் ஆணை வழங்கி உள்ளனர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிர்ந்து வேறெந்த சபையிலும் ஆட்சி அமைப்பது மற்றைய தமிழ் தேசியக்கட்சியின் ஆதரவு அல்லது போட்டித்தவிர்ப்பு அல்லது விலகுதல் போன்ற முடிவுகளில் தங்கியிருக்க வேண்டும் என்றவாறே உள்ளது இன்னிலையில் மக்கள் மறைமுகமாக சொல்லியிருக்கும் செய்தி தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து எமது பிரதேசங்களை ஆளவேண்டும் என்பதே.


எனவே மதிப்பார்ந்தவர்களே நான் பெரிது நீ பெரிது என்று சிந்திக்காது தங்களுக்குள் உள்ள போட்டிகள் பகைகளை மறந்து இனத்தின் அரசியல் இருப்புக்காக எமது சபைகளை நாமே ஆளும் வகையில் தவிசாளர் தெரிவில் நடந்து கொள்ளுங்கள்.


இந்தச் செயற்பாடு எதிர்கால தமிழினத்தின் அரசியல் உரிமைகளை வென்றிடும் பயணத்தை வேகப்படுத்துவதாக அமையும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் ஆள வாய்பிருக்கும் சகல சபைகளையும் கைப்பற்றி மக்களுக்கான தலைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.


தமிழ் தேசபற்றுடன்.

தர்ம விக்னேஸ் ஜான் செட்டியூர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.